×

தமிழக அரசுக்கு, விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பாபநாசத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

தஞ்சாவூர்: தொழில் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மத்திய மாநில அரசுகள் சட்டம் நிறைவேற்றக்கோரி பாபநாசத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். வழக்கறிஞர்கள் சுதந்திரமாக தொழில் செய்ய மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக தமிழக அரசு உயர்த்த வேண்டும். ஜனநாயக அமைப்பான ஜாக்கின் தலைமைக்கு அனுப்பப்பட்ட அறிவிப்புகளை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நீதிமன்றம் எதிரில் பாபநாசம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் வழக்கறிஞர் பாஸ்கர் தலைமையிலும் வழக்கறிஞர்கள் அரியராஜபூபதி, ஜெயக்குமார், இளையராஜா, சங்கீதா, வித்யா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் பன்னீர்செல்வம், அன்புமணி, பாலசுப்பிரமணியன், சிவகுமார், இளையராஜா, சக்கர ராஜா, மணிகண்டன், குபேந்திரன், ஆகிய வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழக அரசுக்கு, விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பாபநாசத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Babanasam ,Tamil Nadu government ,Thanjavur ,Papanasam ,Farmers Association ,Dinakaran ,
× RELATED மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்